Wednesday, November 25, 2009

கேரட் ரோல்

கேரட் ரோல்

தேவையான பொருட்கள்
கேரட் – ½ kg
இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
மசாலா பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – ¼ கப்
எண்ணெய் – 200 gm

செய்முறை
  • கேரட்டை நன்றாக துருவி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
  • கேரட்டை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்
  • இஞ்சி, கொத்தமல்லி,புதினா, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
  • நறுக்கியதை கேரட்டுடன் சேர்க்கவும்
  • பெருங்காயம், மிளகாய் பொடி, மசாலா பொடி , கடலை மாவு ,உப்பு (தேவையானது) சேர்த்து நன்றாக கலக்கவும்
  • இவற்றுடன் கேரட்டையும் சேர்க்கவும்
  • சிறு சிறு ரோல்களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட் ரோல்களைப் பொறிக்கவும்

Thursday, November 19, 2009

ரசம்

மைசூர் ரசம்

தேவையான பொருட்கள்

புளி – நெல்லிகாய் அளவு

மிளகு- 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்

மிளகாய் வத்தல் – 4

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

தணியா – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

பெருங்காயம் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையானஅளவு

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

தக்காளி – 1 சிறியது

தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்

செய்முறை

  • புளியை 10 நிமிடம் ஊறவைக்கவும்
  • மிளகு, தேங்காய் துருவல், தணியா, சீரகம், மிளகாய் வத்தல், துவரம் பருப்பு,கறிவேப்பிலை இவற்றை வறுத்து நைஷாக அரைத்து கொள்ளவும்
  • ஊறவைத்த புளியைக் கரைக்கவும்
  • கரைத்த கலவையில் மஞ்சள் பொடி , பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை,தக்காளி போட்டு கொதிக்கவிடவும்
  • புளிவாடை போன பின் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் சிறிது கொத்தமல்லி போட்டு இறக்கவும்
  • கடுகு தாளித்து கொட்டவும்
  • சுவையான மைசூர் ரசம் ரெடி

நோட்:

வறுத்து அரைக்க சொன்ன பொருட்களை பச்சையாவும் பொடி செய்து போடலாம்

Wednesday, November 18, 2009

தட்டை

பச்சரிசி மாவுத் தட்டை

தேவையான பொருட்கள்

பச்சரிசி- 4 கப்
வறுத்து அரைத்த் உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய் - 100gm
ஊறிய கடலைப் பருப்பு – 1/4 கப்
காரப் பொடி - 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
ஊறிய நிலக்கடலைப் பருப்பு – ¼ கப்

செய்முறை

  • அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து , வெய்யிலில் சிறிது நேரம் காயவைக்கவும்.
  • காய வைத்ததை அரைத்துக் கொள்ளவும்.
  • வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு பொடி , ஊறிய கடலைப் பருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிலை,உப்பு - தேவையான அளவு , ஊறிய நிலக்கடலைப் பருப்பு,பெருங்காயம் ,வெண்ணெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.
  • தட்டியவற்றை எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

நோட்:

  • உளுத்தம்பருப்பை வெறும்வாணலியில் வறுக்க வேண்டும்.
  • சோடா உப்பு , வெண்ணெய் இவற்றை பேஸ்ட் போல் செய்துகொண்டு, பின் மாவில் கலந்தால் கரகரப்பாக் இருக்கும்.

உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்.

Tuesday, November 17, 2009

இஞ்சி மரப்பா

இஞ்சி மரப்பா

தேவையான பொருட்கள்


மாவு இஞ்சி – 100 gm

சர்க்கரை – 200gm

மைதா மாவு - சிறிது

நெய் – 1 டீஸ்பூன்

பாதாம் – 2

முந்தரி – 2


செய்முறை

  • மாவு இஞ்சியை நன்றாக அரைக்கவும்
  • சர்க்கரை கம்பி பாகு போல காய்ச்சவும் ( 1 கப் இஞ்சி கலவைக்கு 2 கப் சர்க்கரை தேவை)
  • அரைத்த இஞ்சியை அந்த சர்க்கரை பாகில் போடவும்
  • சிறிது மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்

  • ஒரு தட்டில் நன்றாக நெய்யை தடவி கலவையை கொட்டவும்
  • சிறிது நேரம் ஆறவிடவும்
  • விரும்பிய வடிவில் அதை வெட்டவும்
  • ஆறியவுடன் சிறிதாக நறுக்கிய பாதாம் , முந்திரி போட்டு அலங்கரிக்கலாம்
  • சுவையான இஞ்சி மரப்பா ரெடி


சர்க்கரை பாகு செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு சிறிது தண்ணீர்
    ஊற்றவும்
  • அடுப்பில் வைக்கவும்
  • கலறிகொண்டே இருக்க வேண்டும்
  • சர்க்கரை நன்கு கரைந்த சிறிது நிமிடத்தில் கம்பி பாகு வந்துவிடும்


நோட்:

இஞ்சி மரப்பா is good for the all kinds of Digestive Problems



Monday, November 16, 2009

சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்

சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு- ½ kg
சீஸ் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லிசிறிது
மிளகு தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
உப்புதேவையானது
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை
  • உருளைகிழங்கை தோல் சீவி சற்று கனமான துண்டுகளாக வட்டமாகநறுக்கவும்
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைக்கவும்
  • பச்சை மிளகாய் , கொத்தமல்லி இரண்டையும் சிறிதாக நறுக்கவும்
  • சீஸ் துருவல் , மிளகு தூள், உப்பு தேவையானது அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • ஒவ்வொரு உருளை துண்டுகளில் இந்த சீஸ் துருவலை பரவலாக வைக்கவும்
  • தோசை கல் காய்ந்தவுடன் சீஸ் துருவல் மேல்புறமாக இருக்குமாறு வைக்கவும்s
  • சுற்றிலும் சிறிது வெண்ணெய் பரப்பி நன்கு வெந்ததும் எடுக்கவும்
சூடான சீஸ் உருளை சில்லி ரோஸ்ட் ரெடி.

Sunday, November 15, 2009

கார வகைகள்

பொட்டு கடலை தட்டை

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 4 கப்
வெண்ணெய் - 100 g

பொட்டு கடலை – 1 கப்
ஊறிய கடலை பருப்பு – 1/4 கப்

காரப் பொடி - 1ஸ்பூன்

ஊறிய நிலக்கடலை பருப்பு – ¼ கப்

சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையானது
எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை

  • அரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்
  • பொட்டு கடலை மிக்க்ஷியில் அரைத்து சலித்து வைத்துகொள்ளவும்
  • அரைத்த பொட்டு கடலை மாவு, ஊறிய் கடலை பருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிலை,உப்பு - தேவையானது ,பெருங்காயம்,வெண்ணெய் இவற்றை ஒன்றாக கலந்துக் கொள்ளவும்
  • சின்ன உருண்டைகலாக் உருட்டி தட்டிக் கொள்ளவும்
  • தட்டியவற்றை எண்ணையில் பொறித்து எடுக்கவும்

நோட்:

  • சோடா உப்பு , வெண்ணெய் இவற்றை பேஸ்ட் போல் செய்துகொண்டு பின் மாவினை கலந்தால் கரகரப்பாக இருக்கும்

உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்

Saturday, November 14, 2009

குழி ஆப்பம்

இனிப்பு குழி ஆப்பம்

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
எண்ணெய் –100 gm
வெல்லம் – 1 கப்
ஏலாச்சி - 2

செய்முறை
  • அரிசி , உளுத்தம் பருப்பு, வெந்தயம் 2 மணி நேரம் ஊறவைக்கவும்
  • ஊறவைத்ததை நைஷாக அரைத்து கொள்ளவும்
  • அரைத்த மாவில் பொடி செய்த ஏலாச்சி போடவும்
  • வெல்லத்தை பாகு வைத்து வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்
  • நன்றாக கலக்கிய பின்னர் குழி ஆப்ப சட்டியில் போட்டு பொன் நிறமாக வந்தவுடன்எடுக்கவும்

Friday, November 13, 2009

மோர் குழம்பு

வெடிக்கவிட்ட மோர் குழம்பு

தேவையான பொருட்கள்

மோர்- 2 கப்
உப்பு – தேவை யான அளவு
அரிசி மாவு- 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வத்தல் – 5
வெந்தயம் – ½ ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ஸ்பூன்
பெருங்காயம் – ½ ஸ்பூன்

செய்முறை
  • கடாயில் கடுகு, துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், வெந்தயம் , போட்டு வறுக்கவும்
  • மோரில் உப்பு , மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு, அரிசி மாவு போட்டு கரைக்கவும்
  • வருத்ததை மோரில் போடவும்
  • சிறிது நேரம் கொதிக்க விடவும்
  • சிறிதாக நறுக்கிய கொத்தமல்லியை அதில் போடவும்
வெடிக்கவிட்ட மோர் குழம்பு தயார்

Sunday, November 8, 2009

காலிஃப்ளவர் டிக்கா

கோபி டிக்கா


தேவையான பொருட்கள்


காலிஃப்ளவர்- 2 நடுத்தர சைஸ்

எலும்ச்சம்பழச் சாறு – 3 டீஸ்பூன்

காரப் பொடி – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

கார்ன் ஃப்ளவர் மாவு – ¼ கப்

சிகப்பு கலர் பொடி – சிறிது

எண்ணெய் – 500 gm


செய்முறை


  • பச்சை தண்ணீரில் உப்பு சேர்த்து முழு காலிஃப்ளவரை அதில் முழ்குமாறு 10 நிமிடம் வைக்கவும் . காலிஃப்ளவர் சுத்தம் ஆகிவிடும்
  • காலிஃப்ளவரை தனி தனி பூவாக கட் செய்து கொள்ளவும்
  • அதனுடன் எலுமிச்சை சாறு , மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா, உப்பு, கலர்பொடி,காரப் பொடி சேர்க்கவும்
  • 2 மணி நேரம் இதை ஊற வைக்கவும்
  • எண்ணெய் காய வைக்கவும் பொரிக்கும் முன் கார்ன் ஃப்ளவர் மாவை பிசறி பொரிக்கவும்
  • சுவையான கோபி டிக்கா ரெடி.

Friday, November 6, 2009

ஆப்பவகைகள்

குழி ஆப்பம்
தேவையான பொருட்கள்

பச்சை அரிசி – 2 கப்

புழுங்கல் அரிசி – 2 கப்

உளுத்தம் பருப்பு – ¾ கப்

வெந்தயம் – 2 ஸ்பூன்

எண்ணெய் - 100 gm

தேங்காய் நறுக்கியது – ¼ கப்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

இஞ்சி – ½ ஸ்பூன் நறுக்கியது

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)


செய்முறை

  • அரிசி , உளுத்தம் பருப்பு, வெந்தயம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  • ஊறவைத்ததைநைஷாக அரைத்து கொள்ளவும்
  • அரைத்த மாவில் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய் நறுக்கியது, இஞ்சி, பச்சை மிளகாய் போடவும்
  • நன்றாக கலக்கிய பின்னர் குழி ஆப்ப சட்டியில் எண்ணெய் விடவும் பிறகு அதில் மாவு போட்டு பொன் நிறமா வந்தவுடன் எடுக்கவும்

நோட்:

மாவு அரைத்து 2 ½ மணி நேரம் கழித்து குழி ஆப்பம் செய்தால் மிருதுவாக இருக்கும்

Thursday, November 5, 2009

கார வகைகள்

கோதுமை மாவு தட்டை


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 4 கப்
வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய்y- 100 g
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
ஊறிய நிலக்கடலை பருப்பு – ¼ கப்
ஊறிய கடலை பருப்பு – 1/4 கப்
காரப் பொடி - 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிளை - சிறிது
உப்பு - தேவையானது
எண்ணெய் - 1/2 litre
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை

  • கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு பொடி , ஊறிய கடலைபருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிளை,உப்பு - தேவையானது,வெண்ணெய் , ஊறிய நிலக்கடலை பருப்பு ,இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்
  • சின்ன உருண்டைகலாக் உருட்டி தட்டிக் கொள்ளவும்
  • தட்டிய வற்றை பொரித்து எடுக்கவும்
நோட்:

  • உளுத்தம்பருப்பை வெறும்வானலியில் வறுக்க வேண்டும்
  • சோடா உப்பு , வெண்ணெய் இரண்டையும் பேஸ்ட் போல் செய்துகொண்ட பின் மாவில் கலந்தால்கரகரப்பாக் இருக்கும்
இதை பற்றி உங்களின் கருத்துக்களை சொல்லவும்

Wednesday, November 4, 2009

குழம்பு வகைகள்

கொத்தமல்லி விதை குழம்பு


தேவையான பொருட்கள்


தனியா – ¼ கப்

மிளகாய் வத்தல் – 6

மிளகு - 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிளை- சிறிது

கொத்தமல்லி– சிறிது

கடுகு- 1 டீஸ்பூன்

எண்ணெய் – 20 gm

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

வெந்தயம் – ¼ ஸ்பூன்


செய்முறை

  • தனியா , மிளகாய் வத்தல் . வெந்தயம் ,மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு கடாயில் வறுக்கவும்
  • வறுத்த வற்றை பொடி செய்துகொள்ளவும்
  • புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிகொள்ளவும்
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன், வறுத்த பொடி ,வடிகட்டிய புளி தண்ணீ்ர், மஞ்சள் பொடி, கறிவேப்பிளை, பெருங்காயம் , உப்பு, போட்டு கொதிக்க விடவும்
  • குழம்பு பதம் வந்தவுடன் இறக்கி அதில் கொத்தமல்லி போடவும்
  • சுவையான கொத்தமல்லி விதை குழம்பு தயார்..

Tuesday, November 3, 2009

மாவு

ரெடிமேட் இடியாப்ப மாவு தயாரித்தல்


தேவையான பொருட்கள்

பச்சரிசி – ½ kg

புழுங்கல் அரிசி – ½ kg

செய்முறை

  • அரிசியை 1 மணி நேரம் ஊற போடவும்
  • நிழலில் உலர்த்தவும்
  • ஈரபதத்துடன் எடுத்தது மெசினில் நைஸாக அரைக்கவும்
  • இந்த மாவை ஒருகாட்டன் துணியில் கட்டவும்
  • துணியில் கட்டிய மாவைஇட்டிலி போன்று ஆவியில் வேகவைக்கவும்
  • சூடுஆறியவுடன் வெயிலில் நன்றாக காயவைக்கவும்
  • பின் காய்ந்த மாவைசலிக்கவும்
ரெடிமேட் இடியாப்பம் மாவு ரெடி

சைடு டிஷ் - மோர்சாறு

மோர்சாறு

தேவையான பொருட்கள்

கடுகு – ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 3

மோர் – 2 கப்

வெந்தயம் – ½ டீஸ்பூன்

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

கறிவேப்பிளைசிறிது

கொத்தமல்லிசிறிது

எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை

  • கடுகு , உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தல் , வெந்தயம் இவற்றை பொன் நிறமாக வறுத்து அரைத்து கொள்ளவும்
  • அரைத்த கலவை மோரில் கலக்கவும்
  • தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • எண்ணெயில் கடுகு, மஞ்சள் பொடியை பொறித்து மோரில் கலக்கவும்
  • சிறிது கொத்தமல்லி , கறிவேப்பிளை போடவும்
  • சுவையான மோர்சாறு ரெடி

நோட்:

இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்



பசலேட் – தோசை

பசலேட்பாசி பருப்பு தோசை

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – 2 வேப்பிலை

அரிசி – 1 கப்

உப்புதேவையான அளவு

மிளகாய் வத்தல் – 6 to 8

நறுக்கிய வெங்காயம் – 1 கப்

கறிவேப்பிலைசிறிது

கொத்தமல்லிசிறிது


செய்முறை

  • பாசி பருப்பு அரிசி யை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்
  • பாசி பருப்பு ,அரிசி,உப்பு,மிளகாய் வத்தல் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்
  • அரைத்த் மாவில் கறிவேப்பிலை ,கொத்தமல்லி , நறுக்கிய வெங்காயம்,தேவையான அளவு உப்புசேர்க்கவும்
  • தோசை மாதிரி சுட்டு எடுக்கவும்
  • சுவையான பசலேட் ரெடி….


Monday, November 2, 2009

அப்பம் வகைகள்

கோதுமை மாவு அப்பம்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – ¼ கப்
வெல்லம் -1 1/2 கப்
எண்ணெய் – ½ லிட்டர்
எலாச்சி பொடி – 1 டீஸ்புன்
தேங்காய் – ¼ கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

  • கோதுமை மாவு ,அரிசி மாவு , வெல்லம் , எலாச்சி பொடி,தேங்காய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும்
  • சிறிய குழிகரண்டியால் அந்த மாவினை சூடு எண்ணையில் விடவும்
  • பொன் நிறமாக வந்தவுடன் எடுக்கவும்
  • சுவையான கோதுமை அப்பம் தயார்

சாட் ஐட்டம்ஸ்

Jhal Muri Recipe


This recipe can be prepared instantly and quickly.


Ingredients :

* 4 cups murmura (puffed rice, buy ready-made)
* 2 onions - chopped finely
* 1/2 cup namkeen sev (buy ready-made)
* 1/4 cup roasted peanuts (moongphali, buy ready-made)
* 1/4 cup roasted channas (ready-made)
* 1-2 green chillies - chopped finely
* 1 tsp chaat masala
* 2 tbsp lemon juice
* 1 tsp mustard oil (optional)
* 1 tbsp saunth or quick meethi chutney (optional)


Method :

* Mix all the ingredients together in a bowl.
* Mix well
* Serve immediately

Comment on the recipe how it is….

ஸ்டாடர் - ஜல்ஜீரா

ஜல்ஜீரா

தேவையான பொருட்கள்


புளி – 1 சிறிய நெல்லிகாய் அளவு

வெண்ணீர் – 6 கப்

புதினா இலை – 8 to 10

கருப்பு உப்பு – 2 டீஸ்பூன்

காரப் பொடி – 1 டீஸ்பூன்

பெருஞ் ஜீரகம் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

புதினா இலை 8 to 10 அலங்கரிக்க

சர்க்கரை – 3 டீஸ்பூன்

லைம் ஜூஸ் – 1 டீஸ்பூன்


செய்முறை


  • அரை மணி நேரம் புளியை சுடு தண்ணீரில் ஊறவைத்து சாரை எடுத்து கொள்ள வேண்டும்.
  • புதினா மற்றும் பெருஞ்ஜீரகத்தை அரைத்து கொள்ள வேண்டும்
  • மேலே கூறிய அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  • அந்த கலவையை வடி கட்டி கொள்ள வேண்டும் .
  • அதனை freezerல் வைக்கவும்
  • சிறிது நேரம் கழித்து எடுத்து புதினா இலை மற்றும் காரா பூந்தி சேர்த்து கார்னிஷ் (garnish) செய்யவும்
  • சுவையான ஜல்ஜீரா ரெடி…!!!

உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்...

Warning

Protected by Copyscape Plagiarism Check Software