Wednesday, December 16, 2009

ரசம்

விளாம்பழ ரசம்

தேவையான பொருட்கள்

புளி – நெல்லிக்காய் அளவு

ரசப் பொடி – 2 ½ ஸ்பூன்

துவரம் பருப்பு – 10 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

பெருங்காயம் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

தக்காளி – 1 சிறியது

விளாம்பழம் – 1

செய்முறை

  • புளியை 10 நிமிடம் ஊறவைக்கவும்
  • துவரம் பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்
  • புளி தண்ணீரில் மஞ்சள் பொடி , பெருங்காயம், உப்பு, தக்காளி ,கறிவேப்பிலை ,உடைத்த விளம்பழம் போடவும்
  • 10 நிமிடம் இதை கொதிக்கவிடவும்
  • புளிவாடை போன பின் வேகவைத்த பருப்பை தண்ணீருடன் விளாவவும்

  • கொதித்தவுடன் சிறிது கொத்தமல்லி போட்டு இறக்கவும்
  • கடுகு தாளித்து கொட்டவும்
  • சுவையான விளாம்பழ ரசம் ரெடி

Tuesday, December 15, 2009

ரசம்

அரைத்துவிட்ட ரசம்

தேவையான பொருட்கள்

புளி – நெல்லிக்காய் அளவு

மிளகு- 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்(வறுக்க)

துவரம் பருப்பு – 10 டீஸ்பூன்(வேக வைக்க)

மிளகாய் வத்தல் – 2

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

பெருங்காயம் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

தக்காளி – 1 சிறிது

செய்முறை

  • புளியை 10 நிமிடம் ஊறவைக்கவும்
  • துவரம் பருப்பை (10 டீஸ்பூன்) நன்றாக வேகவைக்கவும்
  • மிளகு, சீரகம், மிளகாய்வத்தல், துவரம் பருப்பு (1 டீஸ்பூன்),கறிவேப்பிலை இவற்றை வறுத்து நைஷாக அரைத்து கொண்டு அதில் ஊறவைத்த புளியை கரைக்கவும்
  • கரைத்த கலவையில் மஞ்சள் பொடி , பெருங்காயம், தக்காளி, உப்பு, கறிவேப்பிலை , வேகவைத்த பருப்பை தண்ணீருடன் சேர்க்கவும்
  • 10 நிமிடம் இக்கரைசலைக் கொதிக்கவிடவும்
  • புளிவாடை போன பின் விளாவி கொதித்தவுடன் சிறிது கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும்
  • கடுகு தாளித்து கொட்டவும்
  • சுவையான அரைத்து விட்ட ரசம் ரெடி

Warning

Protected by Copyscape Plagiarism Check Software