அரைத்துவிட்ட ரசம்
தேவையான பொருட்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகு- 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்(வறுக்க)
துவரம் பருப்பு – 10 டீஸ்பூன்(வேக வைக்க)
மிளகாய் வத்தல் – 2
கடுகு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
பெருங்காயம் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
தக்காளி – 1 சிறிது
செய்முறை
- துவரம் பருப்பை (10 டீஸ்பூன்) நன்றாக வேகவைக்கவும்
- மிளகு, சீரகம், மிளகாய்வத்தல், துவரம் பருப்பு (1 டீஸ்பூன்),கறிவேப்பிலை இவற்றை வறுத்து நைஷாக அரைத்து கொண்டு அதில் ஊறவைத்த புளியை கரைக்கவும்
- கரைத்த கலவையில் மஞ்சள் பொடி , பெருங்காயம், தக்காளி, உப்பு, கறிவேப்பிலை , வேகவைத்த பருப்பை தண்ணீருடன் சேர்க்கவும்
- 10 நிமிடம் இக்கரைசலைக் கொதிக்கவிடவும்
- புளிவாடை போன பின் விளாவி கொதித்தவுடன் சிறிது கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும்
- கடுகு தாளித்து கொட்டவும்
- சுவையான அரைத்து விட்ட ரசம் ரெடி
No comments:
Post a Comment