Showing posts with label சாட் ஐட்டம்ஸ். Show all posts
Showing posts with label சாட் ஐட்டம்ஸ். Show all posts

Wednesday, November 25, 2009

கேரட் ரோல்

கேரட் ரோல்

தேவையான பொருட்கள்
கேரட் – ½ kg
இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
மசாலா பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – ¼ கப்
எண்ணெய் – 200 gm

செய்முறை
  • கேரட்டை நன்றாக துருவி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
  • கேரட்டை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்
  • இஞ்சி, கொத்தமல்லி,புதினா, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
  • நறுக்கியதை கேரட்டுடன் சேர்க்கவும்
  • பெருங்காயம், மிளகாய் பொடி, மசாலா பொடி , கடலை மாவு ,உப்பு (தேவையானது) சேர்த்து நன்றாக கலக்கவும்
  • இவற்றுடன் கேரட்டையும் சேர்க்கவும்
  • சிறு சிறு ரோல்களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட் ரோல்களைப் பொறிக்கவும்

Monday, November 16, 2009

சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்

சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு- ½ kg
சீஸ் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லிசிறிது
மிளகு தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
உப்புதேவையானது
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை
  • உருளைகிழங்கை தோல் சீவி சற்று கனமான துண்டுகளாக வட்டமாகநறுக்கவும்
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைக்கவும்
  • பச்சை மிளகாய் , கொத்தமல்லி இரண்டையும் சிறிதாக நறுக்கவும்
  • சீஸ் துருவல் , மிளகு தூள், உப்பு தேவையானது அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • ஒவ்வொரு உருளை துண்டுகளில் இந்த சீஸ் துருவலை பரவலாக வைக்கவும்
  • தோசை கல் காய்ந்தவுடன் சீஸ் துருவல் மேல்புறமாக இருக்குமாறு வைக்கவும்s
  • சுற்றிலும் சிறிது வெண்ணெய் பரப்பி நன்கு வெந்ததும் எடுக்கவும்
சூடான சீஸ் உருளை சில்லி ரோஸ்ட் ரெடி.

Sunday, November 8, 2009

காலிஃப்ளவர் டிக்கா

கோபி டிக்கா


தேவையான பொருட்கள்


காலிஃப்ளவர்- 2 நடுத்தர சைஸ்

எலும்ச்சம்பழச் சாறு – 3 டீஸ்பூன்

காரப் பொடி – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

கார்ன் ஃப்ளவர் மாவு – ¼ கப்

சிகப்பு கலர் பொடி – சிறிது

எண்ணெய் – 500 gm


செய்முறை


  • பச்சை தண்ணீரில் உப்பு சேர்த்து முழு காலிஃப்ளவரை அதில் முழ்குமாறு 10 நிமிடம் வைக்கவும் . காலிஃப்ளவர் சுத்தம் ஆகிவிடும்
  • காலிஃப்ளவரை தனி தனி பூவாக கட் செய்து கொள்ளவும்
  • அதனுடன் எலுமிச்சை சாறு , மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா, உப்பு, கலர்பொடி,காரப் பொடி சேர்க்கவும்
  • 2 மணி நேரம் இதை ஊற வைக்கவும்
  • எண்ணெய் காய வைக்கவும் பொரிக்கும் முன் கார்ன் ஃப்ளவர் மாவை பிசறி பொரிக்கவும்
  • சுவையான கோபி டிக்கா ரெடி.

Monday, November 2, 2009

சாட் ஐட்டம்ஸ்

Jhal Muri Recipe


This recipe can be prepared instantly and quickly.


Ingredients :

* 4 cups murmura (puffed rice, buy ready-made)
* 2 onions - chopped finely
* 1/2 cup namkeen sev (buy ready-made)
* 1/4 cup roasted peanuts (moongphali, buy ready-made)
* 1/4 cup roasted channas (ready-made)
* 1-2 green chillies - chopped finely
* 1 tsp chaat masala
* 2 tbsp lemon juice
* 1 tsp mustard oil (optional)
* 1 tbsp saunth or quick meethi chutney (optional)


Method :

* Mix all the ingredients together in a bowl.
* Mix well
* Serve immediately

Comment on the recipe how it is….

Warning

Protected by Copyscape Plagiarism Check Software