Wednesday, November 25, 2009

கேரட் ரோல்

கேரட் ரோல்

தேவையான பொருட்கள்
கேரட் – ½ kg
இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
மசாலா பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – ¼ கப்
எண்ணெய் – 200 gm

செய்முறை
  • கேரட்டை நன்றாக துருவி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
  • கேரட்டை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்
  • இஞ்சி, கொத்தமல்லி,புதினா, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
  • நறுக்கியதை கேரட்டுடன் சேர்க்கவும்
  • பெருங்காயம், மிளகாய் பொடி, மசாலா பொடி , கடலை மாவு ,உப்பு (தேவையானது) சேர்த்து நன்றாக கலக்கவும்
  • இவற்றுடன் கேரட்டையும் சேர்க்கவும்
  • சிறு சிறு ரோல்களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட் ரோல்களைப் பொறிக்கவும்

Thursday, November 19, 2009

ரசம்

மைசூர் ரசம்

தேவையான பொருட்கள்

புளி – நெல்லிகாய் அளவு

மிளகு- 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்

மிளகாய் வத்தல் – 4

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

தணியா – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

பெருங்காயம் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையானஅளவு

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

தக்காளி – 1 சிறியது

தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்

செய்முறை

  • புளியை 10 நிமிடம் ஊறவைக்கவும்
  • மிளகு, தேங்காய் துருவல், தணியா, சீரகம், மிளகாய் வத்தல், துவரம் பருப்பு,கறிவேப்பிலை இவற்றை வறுத்து நைஷாக அரைத்து கொள்ளவும்
  • ஊறவைத்த புளியைக் கரைக்கவும்
  • கரைத்த கலவையில் மஞ்சள் பொடி , பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை,தக்காளி போட்டு கொதிக்கவிடவும்
  • புளிவாடை போன பின் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் சிறிது கொத்தமல்லி போட்டு இறக்கவும்
  • கடுகு தாளித்து கொட்டவும்
  • சுவையான மைசூர் ரசம் ரெடி

நோட்:

வறுத்து அரைக்க சொன்ன பொருட்களை பச்சையாவும் பொடி செய்து போடலாம்

Wednesday, November 18, 2009

தட்டை

பச்சரிசி மாவுத் தட்டை

தேவையான பொருட்கள்

பச்சரிசி- 4 கப்
வறுத்து அரைத்த் உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய் - 100gm
ஊறிய கடலைப் பருப்பு – 1/4 கப்
காரப் பொடி - 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
ஊறிய நிலக்கடலைப் பருப்பு – ¼ கப்

செய்முறை

  • அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து , வெய்யிலில் சிறிது நேரம் காயவைக்கவும்.
  • காய வைத்ததை அரைத்துக் கொள்ளவும்.
  • வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு பொடி , ஊறிய கடலைப் பருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிலை,உப்பு - தேவையான அளவு , ஊறிய நிலக்கடலைப் பருப்பு,பெருங்காயம் ,வெண்ணெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.
  • தட்டியவற்றை எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

நோட்:

  • உளுத்தம்பருப்பை வெறும்வாணலியில் வறுக்க வேண்டும்.
  • சோடா உப்பு , வெண்ணெய் இவற்றை பேஸ்ட் போல் செய்துகொண்டு, பின் மாவில் கலந்தால் கரகரப்பாக் இருக்கும்.

உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்.

Tuesday, November 17, 2009

இஞ்சி மரப்பா

இஞ்சி மரப்பா

தேவையான பொருட்கள்


மாவு இஞ்சி – 100 gm

சர்க்கரை – 200gm

மைதா மாவு - சிறிது

நெய் – 1 டீஸ்பூன்

பாதாம் – 2

முந்தரி – 2


செய்முறை

  • மாவு இஞ்சியை நன்றாக அரைக்கவும்
  • சர்க்கரை கம்பி பாகு போல காய்ச்சவும் ( 1 கப் இஞ்சி கலவைக்கு 2 கப் சர்க்கரை தேவை)
  • அரைத்த இஞ்சியை அந்த சர்க்கரை பாகில் போடவும்
  • சிறிது மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்

  • ஒரு தட்டில் நன்றாக நெய்யை தடவி கலவையை கொட்டவும்
  • சிறிது நேரம் ஆறவிடவும்
  • விரும்பிய வடிவில் அதை வெட்டவும்
  • ஆறியவுடன் சிறிதாக நறுக்கிய பாதாம் , முந்திரி போட்டு அலங்கரிக்கலாம்
  • சுவையான இஞ்சி மரப்பா ரெடி


சர்க்கரை பாகு செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு சிறிது தண்ணீர்
    ஊற்றவும்
  • அடுப்பில் வைக்கவும்
  • கலறிகொண்டே இருக்க வேண்டும்
  • சர்க்கரை நன்கு கரைந்த சிறிது நிமிடத்தில் கம்பி பாகு வந்துவிடும்


நோட்:

இஞ்சி மரப்பா is good for the all kinds of Digestive Problems



Monday, November 16, 2009

சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்

சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு- ½ kg
சீஸ் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லிசிறிது
மிளகு தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
உப்புதேவையானது
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை
  • உருளைகிழங்கை தோல் சீவி சற்று கனமான துண்டுகளாக வட்டமாகநறுக்கவும்
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைக்கவும்
  • பச்சை மிளகாய் , கொத்தமல்லி இரண்டையும் சிறிதாக நறுக்கவும்
  • சீஸ் துருவல் , மிளகு தூள், உப்பு தேவையானது அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • ஒவ்வொரு உருளை துண்டுகளில் இந்த சீஸ் துருவலை பரவலாக வைக்கவும்
  • தோசை கல் காய்ந்தவுடன் சீஸ் துருவல் மேல்புறமாக இருக்குமாறு வைக்கவும்s
  • சுற்றிலும் சிறிது வெண்ணெய் பரப்பி நன்கு வெந்ததும் எடுக்கவும்
சூடான சீஸ் உருளை சில்லி ரோஸ்ட் ரெடி.

Warning

Protected by Copyscape Plagiarism Check Software