Thursday, November 5, 2009

கார வகைகள்

கோதுமை மாவு தட்டை


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 4 கப்
வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய்y- 100 g
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
ஊறிய நிலக்கடலை பருப்பு – ¼ கப்
ஊறிய கடலை பருப்பு – 1/4 கப்
காரப் பொடி - 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிளை - சிறிது
உப்பு - தேவையானது
எண்ணெய் - 1/2 litre
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை

  • கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு பொடி , ஊறிய கடலைபருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிளை,உப்பு - தேவையானது,வெண்ணெய் , ஊறிய நிலக்கடலை பருப்பு ,இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்
  • சின்ன உருண்டைகலாக் உருட்டி தட்டிக் கொள்ளவும்
  • தட்டிய வற்றை பொரித்து எடுக்கவும்
நோட்:

  • உளுத்தம்பருப்பை வெறும்வானலியில் வறுக்க வேண்டும்
  • சோடா உப்பு , வெண்ணெய் இரண்டையும் பேஸ்ட் போல் செய்துகொண்ட பின் மாவில் கலந்தால்கரகரப்பாக் இருக்கும்
இதை பற்றி உங்களின் கருத்துக்களை சொல்லவும்

Wednesday, November 4, 2009

குழம்பு வகைகள்

கொத்தமல்லி விதை குழம்பு


தேவையான பொருட்கள்


தனியா – ¼ கப்

மிளகாய் வத்தல் – 6

மிளகு - 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிளை- சிறிது

கொத்தமல்லி– சிறிது

கடுகு- 1 டீஸ்பூன்

எண்ணெய் – 20 gm

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

வெந்தயம் – ¼ ஸ்பூன்


செய்முறை

  • தனியா , மிளகாய் வத்தல் . வெந்தயம் ,மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு கடாயில் வறுக்கவும்
  • வறுத்த வற்றை பொடி செய்துகொள்ளவும்
  • புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிகொள்ளவும்
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன், வறுத்த பொடி ,வடிகட்டிய புளி தண்ணீ்ர், மஞ்சள் பொடி, கறிவேப்பிளை, பெருங்காயம் , உப்பு, போட்டு கொதிக்க விடவும்
  • குழம்பு பதம் வந்தவுடன் இறக்கி அதில் கொத்தமல்லி போடவும்
  • சுவையான கொத்தமல்லி விதை குழம்பு தயார்..

Tuesday, November 3, 2009

மாவு

ரெடிமேட் இடியாப்ப மாவு தயாரித்தல்


தேவையான பொருட்கள்

பச்சரிசி – ½ kg

புழுங்கல் அரிசி – ½ kg

செய்முறை

  • அரிசியை 1 மணி நேரம் ஊற போடவும்
  • நிழலில் உலர்த்தவும்
  • ஈரபதத்துடன் எடுத்தது மெசினில் நைஸாக அரைக்கவும்
  • இந்த மாவை ஒருகாட்டன் துணியில் கட்டவும்
  • துணியில் கட்டிய மாவைஇட்டிலி போன்று ஆவியில் வேகவைக்கவும்
  • சூடுஆறியவுடன் வெயிலில் நன்றாக காயவைக்கவும்
  • பின் காய்ந்த மாவைசலிக்கவும்
ரெடிமேட் இடியாப்பம் மாவு ரெடி

சைடு டிஷ் - மோர்சாறு

மோர்சாறு

தேவையான பொருட்கள்

கடுகு – ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 3

மோர் – 2 கப்

வெந்தயம் – ½ டீஸ்பூன்

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

கறிவேப்பிளைசிறிது

கொத்தமல்லிசிறிது

எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை

  • கடுகு , உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தல் , வெந்தயம் இவற்றை பொன் நிறமாக வறுத்து அரைத்து கொள்ளவும்
  • அரைத்த கலவை மோரில் கலக்கவும்
  • தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • எண்ணெயில் கடுகு, மஞ்சள் பொடியை பொறித்து மோரில் கலக்கவும்
  • சிறிது கொத்தமல்லி , கறிவேப்பிளை போடவும்
  • சுவையான மோர்சாறு ரெடி

நோட்:

இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்



பசலேட் – தோசை

பசலேட்பாசி பருப்பு தோசை

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – 2 வேப்பிலை

அரிசி – 1 கப்

உப்புதேவையான அளவு

மிளகாய் வத்தல் – 6 to 8

நறுக்கிய வெங்காயம் – 1 கப்

கறிவேப்பிலைசிறிது

கொத்தமல்லிசிறிது


செய்முறை

  • பாசி பருப்பு அரிசி யை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்
  • பாசி பருப்பு ,அரிசி,உப்பு,மிளகாய் வத்தல் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்
  • அரைத்த் மாவில் கறிவேப்பிலை ,கொத்தமல்லி , நறுக்கிய வெங்காயம்,தேவையான அளவு உப்புசேர்க்கவும்
  • தோசை மாதிரி சுட்டு எடுக்கவும்
  • சுவையான பசலேட் ரெடி….


Warning

Protected by Copyscape Plagiarism Check Software