Wednesday, November 4, 2009

குழம்பு வகைகள்

கொத்தமல்லி விதை குழம்பு


தேவையான பொருட்கள்


தனியா – ¼ கப்

மிளகாய் வத்தல் – 6

மிளகு - 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிளை- சிறிது

கொத்தமல்லி– சிறிது

கடுகு- 1 டீஸ்பூன்

எண்ணெய் – 20 gm

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

வெந்தயம் – ¼ ஸ்பூன்


செய்முறை

  • தனியா , மிளகாய் வத்தல் . வெந்தயம் ,மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு கடாயில் வறுக்கவும்
  • வறுத்த வற்றை பொடி செய்துகொள்ளவும்
  • புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிகொள்ளவும்
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன், வறுத்த பொடி ,வடிகட்டிய புளி தண்ணீ்ர், மஞ்சள் பொடி, கறிவேப்பிளை, பெருங்காயம் , உப்பு, போட்டு கொதிக்க விடவும்
  • குழம்பு பதம் வந்தவுடன் இறக்கி அதில் கொத்தமல்லி போடவும்
  • சுவையான கொத்தமல்லி விதை குழம்பு தயார்..

No comments:

Post a Comment

Warning

Protected by Copyscape Plagiarism Check Software