தேவையான பொருட்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
ரசப் பொடி – 2 ½ ஸ்பூன்
துவரம் பருப்பு – 10 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
பெருங்காயம் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
தக்காளி – 1 சிறியது
விளாம்பழம் – 1
செய்முறை
- புளியை 10 நிமிடம் ஊறவைக்கவும்
- துவரம் பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்
- புளி தண்ணீரில் மஞ்சள் பொடி , பெருங்காயம், உப்பு, தக்காளி ,கறிவேப்பிலை ,உடைத்த விளம்பழம் போடவும்
- 10 நிமிடம் இதை கொதிக்கவிடவும்
- புளிவாடை போன பின் வேகவைத்த பருப்பை தண்ணீருடன் விளாவவும்
- கொதித்தவுடன் சிறிது கொத்தமல்லி போட்டு இறக்கவும்
- கடுகு தாளித்து கொட்டவும்
- சுவையான விளாம்பழ ரசம் ரெடி