குழி ஆப்பம்
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – ¾ கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
தேங்காய் நறுக்கியது – ¼ கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி – ½ ஸ்பூன் நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
செய்முறை
- அரிசி , உளுத்தம் பருப்பு, வெந்தயம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- ஊறவைத்ததைநைஷாக அரைத்து கொள்ளவும்
- அரைத்த மாவில் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய் நறுக்கியது, இஞ்சி, பச்சை மிளகாய் போடவும்
- நன்றாக கலக்கிய பின்னர் குழி ஆப்ப சட்டியில் எண்ணெய் விடவும் பிறகு அதில் மாவு போட்டு பொன் நிறமா வந்தவுடன் எடுக்கவும்
நோட்:
மாவு அரைத்து 2 ½ மணி நேரம் கழித்து குழி ஆப்பம் செய்தால் மிருதுவாக இருக்கும்
I tried out the recipe really nice...
ReplyDeletegood.......