தேவையான பொருட்கள்
கேரட் – ½ kg
இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
மசாலா பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – ¼ கப்
எண்ணெய் – 200 gm
செய்முறை
- கேரட்டை நன்றாக துருவி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
- கேரட்டை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்
- இஞ்சி, கொத்தமல்லி,புதினா, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
- நறுக்கியதை கேரட்டுடன் சேர்க்கவும்
- பெருங்காயம், மிளகாய் பொடி, மசாலா பொடி , கடலை மாவு ,உப்பு (தேவையானது) சேர்த்து நன்றாக கலக்கவும்
- இவற்றுடன் கேரட்டையும் சேர்க்கவும்
- சிறு சிறு ரோல்களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட் ரோல்களைப் பொறிக்கவும்