Monday, November 2, 2009

ஸ்டாடர் - ஜல்ஜீரா

ஜல்ஜீரா

தேவையான பொருட்கள்


புளி – 1 சிறிய நெல்லிகாய் அளவு

வெண்ணீர் – 6 கப்

புதினா இலை – 8 to 10

கருப்பு உப்பு – 2 டீஸ்பூன்

காரப் பொடி – 1 டீஸ்பூன்

பெருஞ் ஜீரகம் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

புதினா இலை 8 to 10 அலங்கரிக்க

சர்க்கரை – 3 டீஸ்பூன்

லைம் ஜூஸ் – 1 டீஸ்பூன்


செய்முறை


  • அரை மணி நேரம் புளியை சுடு தண்ணீரில் ஊறவைத்து சாரை எடுத்து கொள்ள வேண்டும்.
  • புதினா மற்றும் பெருஞ்ஜீரகத்தை அரைத்து கொள்ள வேண்டும்
  • மேலே கூறிய அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  • அந்த கலவையை வடி கட்டி கொள்ள வேண்டும் .
  • அதனை freezerல் வைக்கவும்
  • சிறிது நேரம் கழித்து எடுத்து புதினா இலை மற்றும் காரா பூந்தி சேர்த்து கார்னிஷ் (garnish) செய்யவும்
  • சுவையான ஜல்ஜீரா ரெடி…!!!

உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்...

1 comment:

  1. I tried out it its really very tasty to drink.
    good

    ReplyDelete

Warning

Protected by Copyscape Plagiarism Check Software